இலங்கை அணியை விமர்சித்த சங்கக்கார
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று (22) இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 51 ஓட்டங்களால் அடைந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இந்த தோல்விக்கு துடுப்பாட்ட வீரர்களின் செயல்பாடு முக்கிய காரணமாக இருக்கிறது என்று விமர்சித்தார்.
இந்த தோல்வி குறித்து, குமார் சங்கக்கார தனது எகஸ் தளத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
பந்துவீச்சாளர்கள் திட்டமிடலும் அதனைச் செயல்படுத்தும் விதமும் சிறப்பாக இருந்த போதிலும், துடுப்பாட்ட வீரர்கள் அதற்கு மாறாக செயல்பட்டனர்.
கைகளைக் கசக்காமையோடு, ஆட்டத்தில் முனைப்பின்மையோடு, ஆடுகளம் அல்லது போட்டி நிலையை சரியாக புரிந்துகொள்ளாதது இன்றைய தோல்விக்கு முக்கிய காரணம் ” என அவர் கூறினார்.
குமார் சங்கக்காரவின் விமர்சனம், இலங்கை அணியின் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டில் சரியான இணக்கம் இல்லாதது என்ற அடிப்படையிலேயே உள்ளது.




