”புதிய பனிப்போர் வேண்டாம்” : பிரேசில் ஜனாதிபதியின் அவசர செய்தி!
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணித்து அனைத்து நாடுகள் மீதும் வர்த்தக வரியை 15 சதவீதமாக உயர்த்தும் ட்ரம்பின் முடிவை பிரேசில் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ( Luiz Inacio Lula da Silva) அனைத்து நாடுகளையும் சமமாக நடத்துமாறு பரிந்துரைத்துள்ளார்.
“புதிய பனிப்போர் வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் நான் சொல்ல விரும்புகிறேன். வேறு எந்த நாட்டிலும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை, அனைத்து நாடுகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேறொரு நாட்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிர்வினையாற்ற விரும்பவில்லை என்றும், அமெரிக்காவுடனான பிரேசிலின் உறவுகள் விரைவில் “இயல்பு நிலைக்குத் திரும்பும்” என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
“அமைதியாக வாழவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும்” மட்டுமே பிரேசில் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்தி





