இலங்கை செய்தி

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்

 

2009/2010 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

புறக்கணிப்புகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவைப் பிரமாணத்தினூடாக ஏற்பட்டுள்ள அநீதிகள் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சின் முன்பாக இவர்கள் மௌனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இதற்கு கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களும், நிர்வாக கிராம உத்தியோகத்தர் சங்கங்களும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் குறித்த அமைச்சின் செயலாளருடன் இது தொடர்பில் பல சுற்றுப் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட போதிலும், திட்டவட்டமான மற்றும் சாதகமான பதில் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

2026 ஆம் ஆண்டு மார்ச் 02 ஆம் திகதியன்று கிராம உத்தியோகத்தர் சேவையில் 17 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள நிலையில், தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்களில் சுமார் 25 சதவீதமானவர்கள், அதாவது 2,300 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் இதன் மூலம் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்தத் திட்டவட்டமான மற்றும் நியாயமான கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படாவிட்டால், எதிர்வரும் காலங்களில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் குறித்த கிராம உத்தியோகத்தர்கள் குழு தீர்மானித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!