இலங்கை செய்தி

அக்குரேகொட படுகொலை சம்பவம் – துப்பாக்கிதாரி கைது

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து சென்ற நபர் ஒருவர் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கஹதுவ பிரதேசத்தைச் சேர்ந்த அவர், இந்தக் கொலையை வழிநடத்தியதாகக் கூறப்படும் ‘கரந்தெனிய சுத்தா’ எனப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகா என பொலிஸார் கூறுகின்றனர்.

இதற்கமைய, துப்பாக்கிதாரியை ஏற்றிச் சென்ற காரும், நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்வதற்காக வாடகைக்கு பெறப்பட்ட காரும் இன்று (21) பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!