தாய்லாந்தில் பரவிவரும் இனந்தெரியாத வைரஸ் : 72 புலிகள் உயிரிழப்பு!
தாய்லாந்தில் இனந்தெரியாத வைரஸ் தொற்றின் காரணமாக சுமார் 72 புலிகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் வடக்கு மாகாணமான சியாங் மாயில் (Chiang Mai) உள்ள வனவிலங்கு பூங்காக்களில் பிப்ரவரி 8 முதல் 19 வரை இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.
கால்நடை அதிகாரிகளின் முதற்கட்ட சோதனைகளில் பூனைகளிடம் இருந்து வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இறந்த புலிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (anine distemper virus) மற்றும், மைக்கோபிளாஸ்மா பாக்டீரியா (Mycoplasma bacteria) தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் டைகர் கிங்டம் மே ரிமை ( Tiger Kingdom Mae Rim) மூடியுள்ளனர். மேலும் கண்காணிப்பு மற்றும் தடுப்பூசிக்காக உயிர் பிழைத்த புலிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையும் முன்னெடுத்துள்ளனர்.





