இந்தியா செய்தி

தவெக சார்பில் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்த விஜய்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள, தவெக சார்பில் தேர்தல் கண்காணிப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளதாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கமைய இந்தத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இயங்குவார்கள் என்றும்
விஜயம் அறிவித்துள்ளார்.

தலைமைக் கழக மையத் தேர்தல் அலுவலகத்தின் (Headquarters Central War Room) துணையுடன் தலைமைக் கழகம் அளிக்கும் நெறிமுறைகளுக்கு உள்பட்டு இவர்கள் செயல்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாவட்ட வாரியாகவும் தொகுதி வாரியாகவும் தேர்தல் முன் தயாரிப்புப் பணிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டங்களை இவர்கள் ஒருங்கிணைப்பார்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆதவ் அர்ஜூனாவும், சேலம் மாவட்டத்துக்கு அருண்ராஜ் உள்ளிடோரும் தேர்தல் கண்காளிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!