பாரிஸ் அருகே உள்ள இராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு – இளம் வீரர் பலி!
பாரிஸ் அருகே உள்ள இராணுவ முகாமொன்றில் பிரெஞ்சு வீரர் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14 அன்று கிளாமார்ட்டில் (Clamart) உள்ள பெர்சி (Percy) இராணுவ பயிற்சி மையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மையத்தில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் உத்தரவை மீறி வீரர்கள் மது அருந்தியதாகவும், இதன்போது அலெக்ஸாண்ட்ரே லாங்க்பீன் (Alexandre Lanckbeen) என்ற வீரர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நான்கு வீரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.





