உலகம் செய்தி

இன்னும் கலையாத ‘போர் மேகம்’

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் இன்னும் தணியவில்லை. அது தொடர்ந்து பதற்ற நிலையிலேயே இருக்கின்றது.

ஈரான் உடனடியாக ஒரு உடன்படிக்கைக்கு வர வேண்டும் என்றும், தவறினால் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காது என்று அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவிதத்துள்ளார்.

அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் ராணுவப் பயிற்சியும் தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் அதிநவீன போர் விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி தனது பலத்தை அதிகரித்து வருகிறது.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்த பேச்சுகள் இழுபறியில் உள்ள நிலையில், இரு நாடுகளும் மோதலைத் தவிர்க்குமா அல்லது போர் மூளுமா என்ற அச்சம் உலகளவில் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் “அதிகபட்ச அழுத்தம்” கொடுக்கும் கொள்கை பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!