தென்னாபிரிக்கா அணி வெற்றிநடை!
ஐக்கிய அரபு அமீரகம் United Arab Emirates அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா South Africa அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
T20 உலக்கிண்ண தொடரின் 34-வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் டெல்லியில் இன்று (18) மோதின.
இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீசியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 6 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 123 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, 13.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
தென்னாபிரிக்கா அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளதால் இன்றைய போட்டி, அடுத்தக்கட்டத்தை நிர்ணயிக்கும் போட்டியாக கருதப்படவில்லை.




