பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் : நம்பிக்கையில் பிரித்தானிய வங்கி!
தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) தரவுகளின்படி, பிரித்தானியாவில் பணவீக்கம் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 3.4 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கமானது, ஜனவரியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதற்கிடையே வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அரசாங்கம் நிர்ணயித்துள்ள இலக்கான 02 சதவீதத்திற்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்க வீழ்ச்சியானது, அடுத்த மாதம் இங்கிலாந்து தேசிய வங்கியின் வட்டி விகிதக் குறைப்புக்கான நம்பிக்கையைத் தூண்டியுள்ளது.
இதேவேளை வாழ்க்கைச் செலவைக் குறைப்பது தனது முதன்மையான முன்னுரிமை என்று சான்சலர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





