இலங்கை, நெதர்லாந்து இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்!
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Wiebe De Boer, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை நிமித்தம் சந்தித்து பேச்சு நடத்தினார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று மேற்படி சந்திப்பு நடைபெற்றது.
பாதுகாப்பு செயலாளர் , நெதர்லாந்து தூதுவரை வரவேற்று அவருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன்களைக் கொண்ட விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாறிக் கொண்டனர்.
அத்துடன், இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர்.
இது தொடர்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்களது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
மேலும் எதிர்வரும் காலங்களில் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகள் தொடர்பிலும் நம்பிக்கை வெளியிட்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கான நெதர்லாந்து துணைத் தூதுவர் Iwan Rutjens பங்கேற்றார்.





