ஐரோப்பா

ஸ்பெயினில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து – 05 பேர் உயிரிழப்பு!

ஸ்பெயினின் கேட்டலோனியாவில் (Catalonia) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பிராந்திய தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓசோனா (Osona) பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் சேமிப்பு அறையில் மேற்படி தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்றும், சிலர் வயது குறைந்தவர்களாக இருக்கலாம் என்று நம்புவதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில உடல்கள் கருகிவிட்டதால் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கேட்டலோனியா காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!