சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையுமா சிம்பாப்வே? இன்று பலப்பரீட்சை!
ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (17) மேலும் மூன்று முக்கியமான லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
31 ஆவது லீக் ஆட்டத்தில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி முற்பகல் 11.00 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது.
பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் நியூசிலாந்துக்கு எதிராக கனடா அணி சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
32ஆவது லீக் போட்டியில் அயர்லாந்து மற்றும் சிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குறிப்பாக, இப்போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றிபெற்றால், அது நேரடியாக சூப்பர் 8 சுற்றுக்குள் முன்னேறும் வாய்ப்பைப் பெறும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அதேவேளை, 33 ஆவது லீக் ஆட்டத்தில் நேபாளம் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதவுள்ளன.





