ஐரோப்பா செய்தி

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாம்மி நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

துணைப் பிரதமர் டேவிட் லாம்மி (David Lammy) ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை (17) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன்
கலந்துரையாடலில் ஈடுபடுவார் என்றும்பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரித்தானியா பல்வேறு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பார்வையிட்டு குழந்தைகள் பாதுகாப்புக்கான உலகளாவிய வணிக ஒப்பந்ததிலும் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது

இதற்கான விழா நாளை (17) இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெறும்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!