இங்கிலாந்தில் வேலைக்காக போராடும் இளைஞர்கள்
இங்கிலாந்தின் பிராட்ஃபோர்ட் (Bradford) நகரில் இளைஞர்கள் வேலை தேடுவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பாத்திமா ரஷீத் என்ற 19 வயதான பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக தாம் விண்ணப்பித்த வேலைகளின் விபரங்களை பதிவு செய்து வருகிறார்.
16 வயதில் பாடசாலையை விட்டு வெளியேறிய அவர், இதுவரை 205 வேலைகளுக்கு விண்ணப்பித்தும் எந்தவொரு தொழிலும்
கிடைக்கவில்லையென கவலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அண்மைய தரவுகளின்படி, பிராட்ஃபோர்டில் வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.
குறிப்பாக 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வேலை தேடுபவருக்கான உதவித்தொகையை அதிக அளவில் பெறுகின்றனர்.
சால்டேரில் (Saltaire) நடைபெற்ற பயிற்சி கண்காட்சியில் பலர் புதிய வாய்ப்புகளை தேடி வருகை தந்ததாக கூறப்படுகிறது.
28 வயதான கணினி அறிவியல் பட்டதாரி ஜோர்டான் ஸ்மித், பல வேலைகளுக்கு விண்ணப்பித்தும் தொடர்ந்து
நிராகரிப்புகளை சந்தித்துள்ளதாக கூறுகிறார்.
இந்த மன அழுத்தம் மிகவும் கடினமானது என்றும் அவர் கூறுகிறார்.
36 வயதான இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவரும், கடந்த 15 ஆண்டுகளாக குடும்பப் பொறுப்புகளை சுமந்த நிலையில்
தற்போது மீண்டும் தொழில்வாழ்க்கைக்கு திரும்ப விரும்புவதாக கூறியுள்ளார்.
ஆனாலும் 100 க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்தாகவும் ஒரு நேர்காணலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
பொருளாதார சிந்தனைக் குழுவான நகரங்களுக்கான மையம் வெளியிட்ட தகவலின்படி, 2013 முதல் 2023 வரை பிராட்ஃபோர்டில் வேலைவாய்ப்பு வளர்ச்சி வெறும் 2.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
இதே காலத்தில் அருகிலுள்ள லீட்ஸ் (Leeds) நகரில் வேலைவாய்ப்பு வளர்ச்சி அதைவிட பத்துமடங்கு வேகமாக காணப்படுகிறது.
இவ்வாறான சூழலில், பிராட்ஃபோர்டில் இளைஞர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் கூடுதல் ஆதரவு மற்றும் புதிய வாய்ப்புகள் தேவைப்படுகின்றன என்பது தெளிவாகிறது.





