இலங்கை செய்தி

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. வலியுறுத்து!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால Ananda Wijepala உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி UNP இன்று (16) வலியுறுத்தியுள்ளது.

சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேற்படி சம்பவம் நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை CID
அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதால், இந்தப் படுகொலை குறித்து நியாயமான விசாரணை நடக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் நிகழ்ந்த கொலைச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.

மேலும் சட்டத்தரணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!