ஐரோப்பா

ஊழல் குற்றச்சாட்டு – உக்ரைனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் கைது!

உக்ரைனின்  முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ (German Galushchenko) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நாட்டின் எல்லையை கடக்க முயன்றபோது உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்புப் பிரிவினரால் (NABU), கைது செய்யப்படதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ சட்டத்தின் தேவைகள் மற்றும் நீதிமன்றத் தடைகளின்படி “ஆரம்ப விசாரணை நடவடிக்கைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் எரிசக்தி துறையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக NABU வெளிப்படுத்தியதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் ஜெர்மன் கலுஷ்செங்கோ  (German Galushchenko)  தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

உக்ரைனின் சிறப்பு ஊழல் எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் (SAPO) வெளியிட்டுள்ள தகவலின்படி, $100 மில்லியன் திட்டத்தில் பிரபல தொழிலதிபரான திமூர் மிண்டிச்சாலுடன் (Timur Mindich) கூட்டிணைந்து பணமோசடி நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!