லெபனான்-சிரியா எல்லைக்கு அருகே குண்டுவீச்சி தாக்குதல் – நால்வர் பலி!
லெபனான்-சிரியா எல்லைக்கு அருகே இஸ்ரேலியப் படைகள் இன்று காலை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதலை உறுதிப்படுத்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், லெபனானில் உள்ள பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) உறுப்பினர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவத்துள்ளது. இருப்பினும் ஆதாரங்களை முன்வைக்கவில்லை.
அத்துடன் லெபனானின் மஜ்தால் அஞ்சர் (Majdal Anjar) பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்த தாக்குதல் குறித்து PIJ எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
PIJ என்பது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் உள்ள ஒரு ஆயுதக் குழுவாகும், இது ஒரு பாலஸ்தீன அரசை நிறுவுவதற்காக காசாவில் ஹமாஸுடன் இணைந்து போராடுகிறது.





