இலங்கை

போதைப் பொருள் பாவித்து பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதி கைது!

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியொருவர் போதைப் பொருள் பாவித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிகளை ஏற்ற வந்த பேருந்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் திருகோணமலை மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் போக்குவரத்து சபையில் கடமையாற்றி வரும் வவுனியா -ஈரப்பெரிய குளம்,வெஹரகம பகுதியில் வசித்து வரும் 39 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தின் சாரதி போதைப் பொருள் பாவித்து பேருந்தை செலுத்தி வருவதாக திருகோணமலை மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்கு பயணியொருவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக திருகோணமலை பேருந்து  தரிப்பிடத்தில் சாரதியை பரிசோதனை செய்தபோது போதை பாவித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து குறித்த சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி 0779568620

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!