ஐரோப்பா

அலெக்ஸி நவல்னியின் மரணத்தில் திருப்பம் – தவளைகளில் இருந்து பெறப்பட்ட கொடிய விஷம்!

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) டார்ட் தவளைகளில் காணப்பட்ட கொடிய நச்சுப் பொருளைக் உட்கொண்டு சிறையில் உயிரிழந்திருக்கலாம் என இங்கிலாந்து மற்றும் பிற நட்பு நாடுகள் கூறியுள்ளன.

நவால்னி எவ்வாறு இறந்தார் என்பதை நிறுவ ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

முனிச்சில் இன்று இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் நவல்னியின் மனைவியான யூலியா நவல்னி செய்தியாளர்கள் முன் இதனை தெரிவித்துள்ளார்.

இரசாயன ஆயுதமாக வகைப்படுத்தப்பட்ட நியூரோடாக்சினைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த கொடிய விஷ தாக்குதலை ரஷ்ய அரசாங்கமே செய்திருக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எபிபடிடின் (epibatidine) எனப்படும் தவளை விஷம், நவல்னிக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

தென் அமெரிக்காவில் உள்ள பழங்குடியினர் வேட்டையாடும்போது ஊதுகுழல்கள், துப்பாக்கிகளில் இவ்வாறான நச்சு தன்மை வாய்ந்த விஷம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த விஷம் மார்பைனை விட 200 மடங்கு வலிமையானது என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் உள்ள ஒரு தண்டனைக் காலனியில் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!