இலங்கை செய்தி

“எங்களையும் சுடுங்கள்” – யாழில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பதற்றம்!

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவனின் சடலத்துடன், உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதா வட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

யாழ். அல்லைப்பிட்டிப் பகுதியில் நேற்றுமுன்தினம் அதிகாலை ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் பிரயோகத்தில், 17 வயதான அல்பினோ அருள் பயாஸ் என்ற சிறுவன் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியைகள் இன்று வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன.

இதன்போது, சிறுவனைச் சுட்டுக்கொலை செய்த பொலிஸாரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் சடலத்துடன் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சடலத்தை அடக்கம் செய்வதற்காகச் சங்கரத்தை சந்தி ஊடாகக் கொண்டு சென்றபோது, அங்கு பெருமளவிலான வட்டுக்கோட்டை பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பொலிஸாரைக் கண்டதும் ஆத்திரமடைந்த உறவினர்கள்,

“எங்களையும் சுடுங்கள், எங்கள் பிள்ளையை நாசமாக்கிவிட்டீர்களே” எனக் கதறியழுதவாறு பொலிஸாரை நோக்கிச் சென்றனர்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பொலிஸார் மீது மண்ணை அள்ளி வீசியும், அவர்களைத் தள்ளிவிட்டும் உறவினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டது. பின்னர், ஏனைய உறவினர்கள் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!