ட்ரம்ப் தலைமையில் எப்ஸ்டீன் கோப்புகள் திருத்தப்பட்டுள்ளது – வெளியான பரபரப்பு தகவல்
மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் [Jeffrey Epstein] தொடர்பான கோப்புகள் நீதித்துறை வெளியிடுவதற்கு முன்பே முறையற்ற விதத்தில்
திருத்தப்பட்டதாக அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம், சுமார் மூன்று மில்லியன் பக்க ஆவணங்கள் வெளிப்படைத்தன்மை சட்டம் (EFTA) கீழ் வெளியிடப்பட்ட நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்றை தினம் அந்த ஆவணங்களை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த ஆவணங்கள் டொனால்ட் டிரம்ப் தலைமையிலிருந்த போது புலனாய்வு பிரிவால்
(FBI) திருத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக பிரதிநிதி ரோ கன்னா [Ro Khanna] தெரிவித்துள்ளார்.
அண்மைய கோப்புகளில் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இருந்ததால், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் முகங்கள் அடையாளம் காணப்படலாம் என பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணிகள் கவலை வெளியிட்ட நிலையில் கடந்த வாரம் அந்த கோப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்நிலையில் நீதித்துறை (DOJ) வெளிப்படைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லாத பிற பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும்
துணை அட்டார்னி ஜெனரல் டோட் பிளாஞ்ச் [Tod Plance] தெரிவித்துள்ளார்.
மேலும் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் கோப்புகளில் பெயர்கள் முறையற்ற முறையில் திருத்தப்பட்டுள்ளதாகவும், சில முக்கிய தகவல்கள் மறைக்கப்பட்டதாகவும் குற்றம்
சுமத்தியுள்ளனர்.
ஆகவே FBI, DOJ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் காலப்பகுதியில் ஏற்பட்ட திருத்தங்கள் பற்றிய கவலைகள், இப்போதும் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் தொடர்பாக பரிசீலனை செய்யப்படுகின்றன.





