இலங்கை செய்தி

பிக்குகளை விடுவிக்கக் கோரி திருமலையில் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை, சங்கமித்தை விகாரைக்கு முன்பாக இன்று காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக் கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

திருகோணமலை ‘டச்பே’ கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டுமானம் ஒன்றை அமைத்தமை மற்றும் அங்கு புத்தர் சிலையொன்றை நிறுவியமை தொடர்பாக கடந்த மாதம் 14 ஆம் திகதி மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் 4 பௌத்த பிக்குகள் மற்றும் 6 பொதுமக்கள் அடங்குவர். இவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை மற்றும் அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் மீதான பரிசீலனை என்பன நாளைநடைபெறவுள்ளன.

திருகோணமலை மேல் நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றம் ஆகியவற்றில் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இந்தநிலையில், அவர்களுக்குச் சார்பாக நீதி கோரியும், அவர்களை உடனடியாகப் பிணையில் விடுவிக்க வலியுறுத்தியும் ஆதரவாளர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!