இலங்கைக்கான புதிய பணிப்பாளராக ஷானன் கோவ்லின் நியமனம் – ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவிப்பு
இலங்கைக்கான புதிய பணிப்பாளராக ஷானன் கோவ்லினை (Shannon Cowlin) நியமித்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை பொருளாதார மீட்சி மற்றும் மீள்தன்மையை கட்டியெழுப்பும் முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.
கொழும்பில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் அலுவலகத்தில் இன்று காலை ஷானன் கோவ்லின் உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்த நியமனம் குறித்து பெருமையும் பொறுப்புணர்வும் காணப்படுவதாக பதவியேற்ற பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீட்சிப் பாதையில் பயணிக்கும் வேளையில், டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்வது உட்பட, நாட்டின் மீள்தன்மையை வலுப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி முழு உறுதிப்பாட்டுடன் செயல்படும் என அவர் தெரிவித்தார்.
26 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவம் கொண்ட கோவ்லின், 13 ஆண்டுகளை ஆசிய அபிவிருத்தி வங்கியில் பணியாற்றியுள்ளார்.





