தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு? கசிந்த முக்கிய தகவல்
இந்தியாவில் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களில் எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் முதற்கட்டமாகவே வாக்குப்பதிவு இடம்பெறும் வாய்ப்பு காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் திகதி எதிர்வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படும் எனும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் நடைபெற வாய்ப்பு இருக்கக்கூடிய முதற்கட்டத் தேர்தலிலேயே தமிழ்நாட்டிற்கு வாக்குப்பதிவு நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் பாஜக சட்டமன்ற பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தேர்தலுக்கு இன்னும் 65 நாட்களே உள்ளது என்றும், அனைவரும் தயாராக வேண்டும் என்றும் அவர் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமையும் என்றே பாஜக தலைவர்கள் முன்னிலைப்படுத்தி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





