ஒக்ஸ்பிரிட்ஜை கைப்பற்றிய லண்டன் மாணவர்கள் – பராமரிப்பில் உள்ளோர் மற்றும் அகதிகள் படைத்த சாதனை
வடகிழக்கு லண்டனில் உள்ள லண்டன் எக்ஸலன்ஸ் (Excellence) பாடசாலையின் அறுபத்தி இரண்டு மாணவர்கள், இந்த ஆண்டு பிரபலமான ஒக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் (Oxford and Cambridge) பல்கலைக்கழகங்களில் இடங்களைப் பெற்றனர்.
அவர்களில் சிலர் குறைந்த வருமான குடும்பம், பராமரிப்பில் உள்ளோர் அல்லது அகதி அந்தஸ்து பெற்றவர்கள் என பின்தங்கிய பின்னணியிலிருந்து வந்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எக்ஸலன்ஸ் (Excellence) பாடசாலை, பெரும்பாலும் குறைந்த வருமான குடும்பங்களிலுள்ள மாணவர்களையும்
பல்கலைக்கழக வரலாறு இல்லாத மாணவர்களையும் இணைத்துக்கொள்வதற்கு முன்னுரிமையளித்து வருகிறது.
இந்நிலையில் இந்த வருடம் எக்ஸலன்ஸ் (Excellence) பாடசாலையின் மாணவர்களில் ஒக்ஸ்பிரிட்ஜ் (Oxbridge)சலுகை பெற்ற 50 வீதமானோர் இலவச பாடசாலை உணவு பெறும் மாணவர்களாகவும் அல்லது இளம் பராமரிப்பாளர்களாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.





