அரசியல் இலங்கை செய்தி

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விடைபெற தயார்: சிறிதரன் எம்.பி. பகிரங்கம்!

“அரசியலமைப்பு பேரவை விவகாரம் தொடர்பில் தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு தயார்.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் S. Siridaran தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சிறிதரன் எம்.பி. தெரிவிக்கப்பட்டுள்ளார்.

அப்பதவி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே சிறிதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

“அரசியலமைப்பு பேரவையில் இராணுவத்துக்கு ஆதரவாக எட்டு தடவைகள் சிறிதரன் வாக்களித்தார் என பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

அதாவது நான் எட்டு தடவைகள் இராணுவத்தை தெரிவுசெய்துவிட்டேன் என்ற விம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு பேரவையில் நடக்கும் விடயங்களை ஊடகங்கள் முன் பகிரங்கப்படுத்த முடியாது. எனவேதான் சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கோரியுள்ளேன்.

வடக்கு, கிழக்கிலுள்ள மதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர் என்னை விசாரிக்கட்டும்.

சிறிதரன் தமிழ் இனத்துக்கு எதிராக செயல்பட்டார், இராணுவத்துக்கு சார்பாக செயல்பட்டார் என்பதை உரிய ஆவணங்கள் சகிதம் நிரூபித்தால் அரசியல் இருந்தே நான் ஒதுங்கி விடுகின்றேன்.

அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டுவதற்கு உளவியல் போர் முன்னெடுக்கப்படுகின்றது. தலைமைப் பதவிக்கான தேர்தலில் தோற்றவர்கள் இதனை செய்கின்றனர்.” எனவும் சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!