இலங்கை செய்தி

ஜெனிவா இராஜதந்திர சமர் 23 இல் ஆரம்பம்: விஜித தலைமையில் இலங்கை குழு பங்கேற்பு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் UN Human Rights Council 61 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

ஏப்ரல் 2 ஆம் திகதிவரை அமர்வுகள் நடைபெறும் என்ற போதிலும் பெப்ரவரி 23 முதல் 27 வரையான காலப்பகுதிக்குள்ளேயே உயர்மட்ட சந்திப்பு இடம்பெறும்.

குறித்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளது.

ஜெனிவாவில் முக்கிய சில சந்திப்புகளை நடத்துவதற்கு இலங்கை குழு திட்டமிட்டுள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறை போன்ற விடயங்கள் குறித்து ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து முழுமையான அறிக்கை இந்தக் கூட்டத்தொடரில் சமர்பிக்கப்படும் என தெரியவருகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!