ஆஸ்திரேலியா செய்தி

சிட்னியில் களமிறங்கினார் இஸ்ரேல் ஜனாதிபதி: பாதுகாப்பு தீவிரம்!

இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (09) காலை அவர் சிட்னி வந்தார்.

அவரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஜனாதிபதிக்கு எதிராக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் இஸ்ரேல் ஜனாதிபதியை வரவேற்பதற்காக நூற்றுக்கணக்கான யூத மக்கள் ஓன்று கூடியுள்ளனர்.

சிட்னியில் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையிலேயே யூத சமூகத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸ்திரேலியா வந்துள்ளார்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!