போராட்டம் நடத்தினாலும் சம்பள உயர்வு வழங்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!
2027 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பின் மூன்றாவது தவணை வழங்கப்படும் வரை, பொதுத்துறை ஊழியர்களுக்கு எந்த கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 2027 ஜனவரியில் சம்பள உயர்வு நிலுவையில் இருக்கும்போது கொடுப்பனவுகளுக்காக போராடுவது நியாயமானதல்ல என்றார்.
சம்பள உயர்விற்காக அரசாங்கம் 330 பில்லியன் செலவிட வேண்டியிருக்கும் என்றும், 2025 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பிற்கு 110 பில்லியன் மற்றும் 2026 ஆம் ஆண்டு 220 பில்லியன் செலவிடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பள அதிகரிப்பின் மூன்றாவது தவணையை வழங்கிய பின்னர், வரவு செலவு திட்டத்தில் அதிகரிப்பின் தாக்கத்தை மதிப்பிட்ட பிறகு, வேறு ஏதேனும் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




