விளையாட்டு

அமெரிக்காவை வீழ்த்தியது இந்தியா

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘ஏ’ பிரிவில் இன்று நடைபெற்ற 3 ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா அணியை 29 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது.

மும்பையில் நடைபெற்ற  இந்த போட்டியில் இந்திய மற்றும் அமெரிக்க அணிகள் மோதின.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களைப் பெற்று கொண்டது.

அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ்  இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து  49 பந்துகளில் 84 ஓட்டங்களை  விளாசினார்.

அமெரிக்க அணி தரப்பில் ஷாட்லி வான் ஸ்கல்க்விக் சிறப்பாகப் பந்துவீசி 04 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹர்மீத் சிங் 02 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அமெரிக்க அணி சார்பில் மிலிந்த் குமார் 34 ஓட்டங்களையும், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 37 ஓட்டங்களையும் மற்றும் சுபம் ரஞ்சனே 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை கைப்பற்றிய நிலையில், மொஹமட் சிராஜ் 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Sainth

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!