பராக் ஒபாமா காணொளி விவகாரம் – நான் குறைந்த இனவெறிக் கொண்ட ஜனாதிபதி : ட்ரம்ப்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரின் துணைவியாரை உருவ கேலி செய்து சித்தரிக்கப்பட்ட வீடியோ தொடர்பில் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.
வாக்காளர் மோசடி பற்றிய ஆரம்ப பகுதியை மட்டுமே தான் பார்த்ததாகவும், மீதமுள்ள பகுதியை தனது ஊழியர்களிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்த அவர், இந்த விடயத்திற்கு மன்னிப்பு கோர மறுத்துவிட்டார்.
அத்துடன் தான் “குறைந்த இனவெறி கொண்ட ஜனாதிபதி” என்றும், சிறுபான்மை வாக்காளர்களுக்கு வேறு எந்த ஜனாதிபதியையும் விட அதிகமாக செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் குடியரசுக் கட்சி செனட்டர்கள் டிம் ஸ்காட் (Tim Scott) மற்றும் ரோஜர் விக்கர் (Roger Wicker) ஆகியோர் பகிரங்கமாக காணொளியை நீக்க வேண்டும் என்றும் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
குறித்த காணொளி தற்போது நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
ஒபாமாக்களை குரங்குகளாக சித்தரிக்கும் காணொளியை வெளிட்ட ட்ரம்ப் – உலக தலைவர்கள் கடும் கண்டனம்!





