கிரீன்லாந்தில் தனது முதல் புறக்காவல் நிலையத்தை திறக்கும் கனடா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதாக எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, கனடா தனது முதல் இராஜதந்திர புறக்காவல் நிலையத்தை கிரீன்லாந்தில் திறக்க உள்ளது.
கனடாவின் மூத்த அதிகாரிகள் குழு, கவர்னர் ஜெனரல் மேரி சைமன் (Mary Simon) மற்றும் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) ஆகியோர் இன்று கனடாவின் துணைத் தூதரகத்தை முறையாகத் திறப்பதற்காக நூக்கிற்கு (Nuuk) பயணம் செய்துள்ளனர். அவர்களுடன் கனடாவின் கடலோர காவல்படை செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விஜயத்திற்கு முன்னதாக இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சைமன், கனடா “தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் கிரீன்லாந்து மக்களுக்கு உறுதியாக ஆதரவாக நிற்கிறது” என்று கூறினார்.
இதேவேளை பிரெஞ்சு அரசாங்கமும் கிரீன்லாந்தில் தங்கள் சொந்த தூதரகத்தை திறக்கவுள்ளது.
இதுவரை அமெரிக்கா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமே நூக்கில் தங்கள் தூதரகத்தை அமைத்திருந்த நிலையில், தற்போது பல நாடுகள் தங்கள் தூதரகத்தை அமைக்க முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





