உலகம்

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அட்டகாசம் – 162 பேர் பலி!

மேற்கு நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் உள்ள கிராமங்களில் ஆயுதம் ஏந்திய குழுவினர் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 162 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வோரோ (Woro) மற்றும் நுகு (Nuku) ஆகிய கிராமங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் இணைந்த ஆயுதக் குழு இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் கிராமவாசிகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தாக்குதலில் 170 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை மாநில ஆளுநர், பிராந்தியத்தில் நடந்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ‘பயங்கரவாதக் குழுக்களின் விரக்தியின் கோழைத்தனமான வெளிப்பாடு’ என்று விவரித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!