உலகம்

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் ICE முகவர்கள் – நீதிபதிகள் கடும் விமர்சனம்!

குடியேறிகளை விடுவிப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றத் தவறியமைக்காக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) மீது அமெரிக்க கூட்டாட்சி நீதிபதிகள் கடுமையான விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மாவட்ட நீதிபதி ஜெர்ரி ஆர். பிளாக்வெல் (Blackwell), ICE இன் “ஆபத்தான” தோல்விகளை எடுத்துரைத்தார், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாததற்காக அதிகாரிகள் அவமதிப்புக்கு உள்ளாக்கப்படலாம் என்று பரிந்துரைத்தார்.

அதிகமான நபர்கள்  தடுத்து வைக்கப்பட்டமை மற்றும், வழக்குகளை தீர்ப்பதற்கான அதன் திறனை மீறியமையே நீதிமன்றத்தின்  உத்தரவுகளுக்கு இணங்காததற்குக் காரணம் என்றும் அவர் விமர்சித்தார்.

அதேபோல் நீதித்துறை வழக்கறிஞர் ஜூலி லீ (Julie Le), சட்ட அமைப்பு மோசமானது என்றும் அதிகாரிகளின் மந்தமான செயற்பாடுகள் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

மற்றொரு கூட்டாட்சி நீதிபதி, பேட்ரிக் ஜே. ஷில்ட்ஸ் (Patrick J. Schiltz), இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ICE நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் 96 நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!