இலங்கை செய்தி

ராஜபக்ச குடும்ப உறுப்பினருக்கு சிவப்பு பிடி விறாந்து!

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் Chamal Rajapaksa இளைய மகன் ஷமிந்திர ராஜபக்சவை Chamindra Rajapaksa கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று (2) மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஷமிந்திர ராஜபக்ச தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றார் எனக் கூறப்படுகின்றது
.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் ஊழல் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில், ஷமிந்திர ராஜபக்ச மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டதை அடுத்து, கோட்டை நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவில் வசிப்பதாகக் கூறப்படும் சந்தேக நபரைக் கைது செய்ய சர்வதேச பொலிஸ் உதவியைப் பெறவும், சிவப்பு அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கவும் கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமாரகே உத்தரவிட்டுள்ளார்.

விமானக் கொள்வனவின் போது இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் பணம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பரப்புரைக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரவினர் CID இது பற்றி நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தினர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!