ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீ – போராடும் தீயணைப்பு வீரர்கள்!
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் (Adelaide) காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
அதனை அணைக்க சுமார் 250 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும், 20 க்கும் மேற்பட்ட சொத்துக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 960 ஹெக்டேயர்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை உச்சம் தொட்டுள்ளது. சுமார் 50 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





