உலகம்

மினியாபோலிஸில் கூட்டாட்சி முகவர்களால் தடுத்துவைக்கப்பட்ட தந்தை, மகனை விடுதலை செய்ய உத்தரவு!

மினியாபோலிஸில் (Minneapolis) கூட்டாட்சி முகவர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தந்தை மற்றும் 05 வயது சிறுவனை விடுதலை செய்யுமாறு கூட்டாட்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாவட்ட நீதிபதி பிரெட் பியரி (Fred Biery) நிர்வாகத்தின் பெருமளவிலான நாடுகடத்தல் பிரச்சாரத்தை கடுமையாக விமர்சித்ததுடன், அதை “தவறான கருத்தாக்கம் மற்றும் திறமையற்ற முறையில் செயல்படுத்தப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதியின் மூன்று பக்க உத்தரவில் சுதந்திரப் பிரகடனம் மற்றும் பைபிள் வசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அத்துடன்  பிப்ரவரி 3 ஆம் திகதிக்குள் லியாம் மற்றும் அவரது தந்தை  விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முகவர்களின் இவ்வாறான மோசமான நடவடிக்கை குழந்தைகளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது எனவும் நீதிபதி  குறிப்பிட்டுள்ளார்.

சிறுவன் லியாம் கோனெஜோ ராமோஸ் ( Liam Conejo Ramos)  மற்றும் அவரது  தந்தை அட்ரியன் அலெக்சாண்டர் கோனெஜோ அரியாஸ்   (Adrian Alexander) ஆகியோர் கடந்த வாரம் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

லியாம் நீல நிற பன்னி தொப்பி அணிந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள புகைப்படம் வைரலாகி  உலகளாவிய சீற்றத்தைத் தூண்டியமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!