அணுசக்தி ஆலையை மீளக் கட்டியெழுப்பும் பணியில் ஈரான் – அம்பலப்படுத்திய ஒளிபடங்கள்!
ஈரான் குண்டுவீச்சுக்கு உள்ளான தனது அணுசக்தி ஆலையை மீள புனரமைத்து வரும் காட்சியை செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
அமெரிக்க பூமி-படமாக்கல் நிறுவனமான பிளானட் லேப்ஸ் PBC (Planet Labs PBC) வெளியிட்டுள்ள படங்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) ஆகிய பகுதிகளில் சேதமடைந்த கட்டிடங்களின் கூரைகள் மீளவும் கட்டப்பட்டிருப்பதை குறித்த படங்கள் காட்டியுள்ளன.
இஸ்ரேல் அல்லது அமெரிக்காவால் கண்டறியப்படாமல் குண்டுவெடிப்பில் இருந்து தப்பியிருக்கக்கூடிய முக்கிய அணுசக்தி சொத்துக்களை மீட்டெடுக்க ஈரானிய விஞ்ஞானிகள் முயற்சிப்பதை இந்த கட்டுமானம் குறிப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜுன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு நடவடிக்கையில் ஈரானின் அணுசக்தி கிடங்குகள் தாக்கி அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





