உலகம்

சீனா பறக்கிறார் பிரிட்டன் பிரதமர்! புருவத்தை உயர்த்துகிறது ட்ரம்ப் நிர்வாகம்!!

பிரிட்டன் UK பிரதமர் கியெர் ஸ்டார்மர் Keir Starmer ஜனவரி 28 ஆம் திகதி புதன்கிழமை சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே அவர் பீஜிங் செல்கின்றார்.

2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரிட்டன் பிரதமர் ஒருவர் சீனா செல்வது இதுவே முதல் முறை என்பதால், இவ்விஜயம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சீன ஜனாதிபதியை, பிரிட்டன் பிரதமர் சந்திக்கவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி போர் காரணமாக ஏனைய நாடுகளில் சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் மேற்குலக நாடுகள் அவதானம் செலுத்தியுள்ளன.

கனடா, ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் சீனாவுடன் நட்புறவை ஏற்படுத்த முற்படும் சூழ்நிலையிலேயே பிரிட்டனும் இராஜதந்திர நகர்வில் இறங்கியுள்ளது.

பிரிட்டனின் இந்த நகர்வு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையிலான கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தையும் கிளப்பியுள்ளது.

பிரிட்டன் பிரதமரின் சீன பயணம் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் கழுகுப்பார்வை செலுத்தும் என தெரியவருகின்றது.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!