குஜராத்தில் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணம்
குஜராத்தின்(Gujarat) சூரத்(Surat ) மாவட்டத்தில் 70 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மகர சங்கராந்தி(Makar Sankranti) பண்டிகையை முன்னிட்டு ரெஹான்(Rehan) என்ற நபர் தனது மனைவி ரெஹானா(Rehana) மற்றும் 7 வயது மகள் ஆயிஷா(Ayesha) வெளியே சென்றுள்ளனர்.
மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த போது ஒரு காத்தாடியின் நூல் திடீரென ரெஹானின் கழுத்தை சுற்றியுள்ளது.
பின்னர் ஒரு கையால் நூலை அகற்ற முயன்றபோது ரெஹான் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.
இதனால் வாகனம் பாலத்தின் சுவரில் மோதியது, மேலும் மூவரும் 70 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.
இந்நிலையில், ரெஹானும் ஆயிஷாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர், ரெஹானா பலத்த காயம் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.





