ஆஸ்திரேலியா உலகம்

பற்றி எரியும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் பல வருடங்களுக்கு பிறகு கடும் வெப்ப அலை உருவாகியுள்ளது. இதனால் நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட மாநிலங்களில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது.

விக்டோரியாவில் நாளை (9) கடும் வெப்பம் நிலவும் என்பதால் காட்டுத் தீ பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகளிலும் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது.

ஆஸ்திரேலியாவில் 2019-20 இல் ஏற்பட்ட கோடைக்கால காட்டுத் தீயில் 30 இற்கு மேற்பட்டோர் பலியாகினர். பெருமளவான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியது.

தற்போது ஏற்பட்டுள்ள நிலை இதைவிட மோசமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பல ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளது. பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!