உலகம்

வெனிசுலாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் ட்ரம்ப் ஆலோசனை!

வெனிசுலாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் அமெரிக்க நிறுவனங்களுடன் ஆலோசனை செய்ய ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய இந்த வார இறுதியில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளைச் சந்திக்க ட்ரம்ப் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் மூன்று பெரிய  எண்ணெய் நிறுவனங்களான எக்ஸான் மொபில் (Exxon Mobil), கோனோகோபிலிப்ஸ் (ConocoPhillips)  மற்றும் செவ்ரான் (Chevron) ஆகியவை மதுரோவின் வெளியேற்றம் குறித்து எந்த பேச்சுவார்த்தைகளையும் இதுவரை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

தென் அமெரிக்க நாட்டிற்குள் அமெரிக்காவின் உயர்மட்ட எண்ணெய் நிறுவனங்களை மீண்டும் நிறுவுவதற்கு ட்ரம்ப் முயற்சித்து வருகின்ற சூழ்நிலையில், மேற்படி நிறுவனங்களின் ஆதரவையும் ட்ரம்ப் எதிர்பார்த்துள்ளார்.

ஆகவே வர இருக்கும் வாரங்களில் இது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!