இலங்கை செய்தி

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி வாகனம் மோதி பலி: புத்தாண்டில் சோகம்!

வாகன பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரியொருவர் வேன் மோதி பலியாகியுள்ளார். மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளார்.

அம்பலாங்கொடை Ambalangoda நகரிலேயே இன்று (01) அதிகாலை 2.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு பொலிஸ் அதிகாரிகள் , அம்பலாங்கொடை நகரில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த வேனொன்றை நிறுத்துவதற்குரிய சமிக்ஞையை வெளிப்படுத்தினர்.

அவ்வேளையிலேயே இரு அதிகாரிகளையும் மோதி தள்ளிவிட்டு வேனில் சென்றவர்கள், தப்பியோடியுள்ளனர். அம்பாந்தோட்டை பகுதியை நோக்கியே குறித்த வேன் சென்றுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது.

சரத் என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே உயிரிழந்துள்ளார். மற்றையவர் அம்பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!