புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தும் பல்கேரியா!
ஊழல் எதிர்ப்பு போராட்டங்களால் அரசாங்கம் இராஜினாமா செய்துள்ள நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.
இதற்கமைய புதிய அமைச்சரவையை அமைப்பது குறித்து நாடாளுமன்றக் குழுக்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரோசன் ஜெலியாஸ்கோ (Rosen Zhelyazkov) தலைமையிலான அரசாங்கம் ஆட்சி அமைத்ததில் இருந்து சுமார் 06 தடவைகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற போராட்டம் ஆட்சி கவிழ்ப்பிற்கு வழிவகுத்தது. இதற்கமைய ஜனாதிபதி ருமென் ராடேவ் (Rumen Radev) புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் நாடாளுமன்ற குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முயற்சி தோல்வியுற்றால் இரண்டு மாதங்களில் ஒரு புதிய தேர்தல் நடைபெறும் வரை அவர் ஒரு இடைக்கால அமைச்சரவையை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.





