ஹாங்காங் தீவிபத்து – 18 மணிநேரமாக தொடரும் போராட்டம் : 44 பேர் பலி!
ஹாங்காங்கின் (Hong Kong) தாய் போ (Tai Po) மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 279 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்து வரும் தீயை அணைக்க 800க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 2,000 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 4,600 குடியிருப்பாளர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மூன்று கட்டுமான நிறுவன நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஹாங்காங்(Hong Kong) தீ விபத்து – பலி எண்ணிக்கை 36ஆக உயர்வு(UPDATE)




