ரஷ்யாவின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் விபத்து!
ரஷ்யாவின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ‘ட்ரோன்’ ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரஷ்யாவில் உள்ள இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தினால் எந்த உள்கட்டமைப்பும் சேதமடையவில்லை என்று Krasnodar பிரதேசத்தின் செயல்பாட்டு தலைமையகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 15 மைல் தொலைவில் உள்ள அஃபிப்ஸ்கி சுத்திகரிப்பு ஆலையை ஆளில்லா விமானம் தாக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. .
(Visited 9 times, 1 visits today)