நடிகையை தேடி வந்த ஏடாகூடமான வாய்ப்பு… கல்லாப்பெட்டி நிரம்பிடுச்சு

அந்த உயர்ந்த நடிகை சமீபகாலமாக பெரிய ஹிட் படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு மவுசு குறைந்ததால் நடிகையும் கூட கொஞ்சம் அப்செட்டில் இருந்தார்.
பாடி பில்டர் நடிகரை வைத்து எப்படியாவது மார்க்கெட்டை ஸ்டடி செய்ய வேண்டும் என அவர் பிளான் போட்டார். ஆனால் இருவரும் சேர்ந்து நடித்த படம் மொக்கை வாங்கியது.
ஆனாலும் மாஸ் ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பு இரண்டாவது முறையாக அவருக்கு கிடைத்தது. அதை அடுத்து உச்ச நடிகர் படத்திலும் அம்மணி ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு சம்மதித்து விட்டார்.
இதற்காக அவருக்கு பல கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது தனி தகவல். ஆனால் இப்போது விஷயமே வேறு. நடிகையை தேடி ஒரு ஏடாகூடமான விளம்பரப்பட வாய்ப்பு வந்திருக்கிறது.
ஆரம்பத்தில் இப்படி எல்லாம் நடித்தால் தன்னுடைய இமேஜ் போயிடும் என நடிகை நோ சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த நிறுவனம் மீண்டும் நடிகையை அனுகி இரு மடங்கு சம்பளம் தருவதாக சொல்லி இருக்கின்றனர்.
அந்த வார்த்தையில் மயங்கி போன நடிகை தற்போது ஓகே சொல்லிவிட்டாராம். இந்த விஷயம் தற்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் விளம்பர படம் வெளியில் வந்தால் தான் இது உண்மையா இல்லையா என்று தெரிய வரும்.