ஆசியா

மலேசியாவில் மேருவில் உள்ள மோட்டார்சைக்கிள் கடைக்கு அருகே நபர் ஒருவர் சுட்டுக்கொலை

மலேசியாவின் கிள்ளான் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) பிற்பகல், நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஜாலான் மேருவில் உள்ள மோட்டார்சைக்கிள் கடைக்கு அருகே அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்த நபவரை நோக்கி ஆறுமுறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“மேரு மக்களே, கவனமாயிருங்கள். சற்று முன்னர் இங்கு ஒரு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுள்ள பதிவு இணையத்தில் வேகமாகப் பரவியதாக ‘சினார் ஹரியான்’ நாளேடு தெரிவித்துள்ளது.

மேலும் பலர், அந்தச் சம்பவத்தைப் பார்த்ததாகவும் அதுபற்றிக் கேள்விப்பட்டதாகவும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை உறுதிசெய்து காவல்துறை இன்னும் தகவல் வெளியிடவில்லை.

மலேசியாவில் அண்மையில் ஜூன் 13, 17ஆம் தேதிகளில் முறையே பிரிக்ஃபீல்ட்ஸ், செராஸ் வட்டாரங்களில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நடந்தன.

(Visited 5 times, 5 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
Skip to content