பாக்கியாவை காப்பாத்தி விட்டு புது சீரியலை தூக்கும் விஜய் டிவி

விஜய் டிவி புதுசு புதுசாக நாடகத்தை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சில சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் கம்மியான புள்ளிகளை பெற்றதால் அதை முடிப்பதற்கு தயாராகி விட்டார்கள்.
அதாவது ஆயிரம் எபிசோடுக்கு மேல் கதையே இல்லாமல் அரைத்து மாவை அரைத்துக் கொண்டிருக்கும் பாக்கியா சீரியல் கூடிய சீக்கிரத்தில் முடியப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதற்கு பதிலாக அய்யனார் துணை சீரியலை 8.30 மணிக்கு ஒளிபரப்பு செய்து பாக்கியா சீரியலை 7 மணிக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
இதனால் இப்போதைக்கு பாக்கியா சீரியல் முடியப்போவதில்லை, ஆனால் இதற்கு பதிலாக புதுசாக வந்த சீரியல் முடிய போகிறது.
அதாவது பனிவிழும் மலர்வனம் என்ற சீரியல் தினமும் ஒரு மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த சீரியலின் கதைகள் விறுவிறுப்பாகவும் பார்க்க ஆர்வமாக இருந்தாலும் டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கியதால் இந்த சீரியலை இந்த மாதத்திலேயே நிறைவு செய்யப் போகிறார்கள்.
ஆனால் இந்த சீரியலை பொறுத்தவரை தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் தான் வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் அன்பு கேரக்டரில் நடித்து வரும் வினுஷா மற்றும் கதிர்வேல் கேரக்டரில் நடித்து வரும் சித்தார்த் கதாபாத்திரமும் மக்களை கவர்ந்திருக்கிறது.
முக்கியமாக இதில் சேரன் கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் நடித்த ரயான் அதிக அளவில் மக்களை கவர்ந்திருக்கிறார்.
ஆனால் பிக் பாஸ் போயிட்டு வந்த பிறகு இவர் சீரியலில் நடிப்பதை நிறுத்தியதால் இவருக்கு பதிலாக புதுசாக ஒரு கேரக்டரை கொண்டு வந்திருந்தார்கள். ஆனாலும் பிரேம் டைம் கிடைக்காததால் டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கிவிட்டது.
இந்த சீரியலை இந்த மாதத்துடன் முடித்து விடலாம் என்று விஜய் டிவி சேனல் தரப்பில் இருந்து முடிவு பண்ணி விட்டார்கள்.